சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் உள்ள வேறுபாடு முக்தி கொடுப்பது ஈஸ்வரனா அல்லது பெருமாளா என்று. எனினும், இன்று நான் அறிந்தது முக்தி பெறுவது முற்காலத்தில் குறிப்பிட்டது ஈஷ்வரனையோ அல்லது பெருமாளையோ அல்ல.
நமது உடம்பில் ப்ரஹ்ம கிராந்தி, விஷ்ணு கிராந்தி மற்றும் ருத்ர கிராந்தி என்று மூன்று முடுச்சுக்கள் இருக்கின்றது. அதில் முக்தி கிடைப்பது விஷ்ணு கிராந்தியாலா அல்லது ருத்ர கிரந்தியாலா என்பதே சர்ச்சையாக இருந்திருக்க வேண்டும். அதுவே காலப்போக்கில் விஷ்னுவாலா அல்லது ருத்திரனாலா என்று மருவி இருக்க கூடும்.
விஷ்ணு கிராந்தியில் ஐம்புலனை அடக்கி எல்லாம் அன்பு மயமாக காண்கிறோம். ருத்ர கிராந்தியில் அன்பையும் துறந்து தன்னையும் துறக்கிறோம்.