இரண்டு நாள் யாத்திரை
அவளிடம் பேச,
காத்திருக்க வேண்டும்
இன்று மாலை வரை
பேசும் தொலைவில் அவள் இல்லை
எளிதில் பேச கைபேசி இல்லை
பொது தொலைபேசி சிக்கும் பொது
அவள் கனவுலகில் தொலைந்து சிக்கும் பொழுது
பயணத்தில் களைப்பாற்ற நிறுத்தும்
இடைவெளியில் இடைவிடாது
தொலைபேசியை துளாவியது கண்கள்
கிட்டயும் பயனில்லை
மறுமுனையில் அவளில்லை
வெள்ளி முடிந்து
வெள்ளி முளைக்கும் வரை
வெறுத்திருக்க வேண்டும்
பொழுதை மறந்திருக்க வேண்டும்
கண்வரை அவளிருந்ததால்
தொடர்ச்சியை கண்களில் தூக்கமில்லை
கனவுகளிலும் அவளில்லை
விடிகாலை விடிவு வரும் என
வீதிகளில் விதியற்றவன்போல்
பொது தொலைபேசியை தேடி
அலைந்தேன் ஒரு கடையும் திறக்கவில்லை!
புதிய ஊரை சாடியும் பயனில்லை!
ஒன்றரை நாள் கழித்து பேச
இரண்டரை மைல் நடந்து, தொலைபேசியில்
மூன்றரை நிமிடம் கழித்து,
நான்கரை கட்டையில், ஹலோ என்றாள்-தூக்ககலக்கத்தில்
ஐந்தரை அங்குலம் விரிந்தது என் உதடுகள், அவள் குரல் கேட்டு
விரிந்து என்ன பயன்?
என் குரல் அவளுக்கு விளங்கவில்லை!
எனக்கிருந்த ஏக்கம் அவளுக்கில்லை
பேச்சில் சுரத்தில்லை -ஏமாற்றத்தில்
அப்புறம் என்றேன்!
விழுப்புரம் என்றுரைக்காமல்
ஏதோ வெட்டியாய் சில நிமிடங்கள்
ஏக்கத்துடன் பேசினேன்-அழைப்பை துண்டிதபின்
ஏமாற்றத்தில் முகத்தில் அசடுகள் சில வடித்தேன்