இன்பம் துள்ளும்போதும் துன்பத்தில் நொந்தபோதும்
உன்னை இறுக்கி அணைக்க ஏன் தோன்றவேண்டும்?
வம்பு தும்பு முதலில் சொல்ல
மனம் உன்னை மட்டும் ஏன் நாடவேண்டும்?
கள்ளம் கள்ளம் குறும்பு செய்ய
எந்தன் கைகள் உன்னிடையை ஏன் தேடவேண்டும்?
நட்டநடு கும்பலுக்குள்ளும் இரகசியம் பேச
நம் இருவர் கண்கள் ஏன் மோதவேண்டும்?
ஊடல் தினம் நாம் கொண்ட போதும்
அருகில் நீ இல்லையென்றால் மனம் ஏன் நோக வேண்டும்?
நாள்முழுதும் உன்கூட இருந்தபோதும்
விட்டுப்பிரிய ஏன் கசக்க வேண்டும்?
கேள்வி பல, விடை ஒன்று அது உன்மீது
நான் கொண்ட காதலென்று நான் சொல்லவா வேண்டும்?
No comments:
Post a Comment