Thursday, August 30, 2007

ஏழையின் சிரிப்பு!!

புதுசாய் கிடைத்த பழையத் துணி
அழகாய் தைத்த கிழிந்த துணி
ஓவியன் அறியா பல வண்ணம்
வரமாய் பெற்றது அந்த துணி

குளித்த ஈரத்தில் தலைச் சீவி
நீண்ட மீசையை வீரமாய் முறுக்கி
பற்கள் மட்டுமே பளிச்சென அமைய
அதற்கிணையாய் நேற்றியில் திருநீர் அனிந்து
அவனறிந்த மறை ஓதி
கந்தலனிந்தாலும் கந்தனை வணங்கி
குவள நீரில் பசியாறி
பணியில் பலர் பார்வையில்
அவன் புதிய துணியில் பூரிப்பு
அனைத்திலும் அழகாய் அவ்வேழையின் சிரிப்பு!!

இந்தியா முன்னேருமோ?

இறைவன் உன்னிடத்தில் இருப்பதை உணர்வாய்
வாய்மையைய் துணையாய் கொண்டு வெல்வாய்

கலிமுடிந்து இறைவன்வந்தென்ன பயன்
இன்றுவிட்டால் நாளைகிடைத்து என்ன பயன்?

கண்டவன் சுருட்டிச்செல்ல,
உழைப்புஎன்ன இலவசமா?
வாழ்க்கை மயானமா?

பொறுமை காக்க உன்மதம் சொல்லலாம்!
இறைவன் வருவான் என்றும் உரைக்கலாம்

அதுவரை பிழைத்திருக்குமா?
நாடு பொறுத்திருக்குமா?
இளைத்தவர் பிழைத்திருப்பாரோ?

நம் இந்தியா முன்னேருமோ?

எட்டுத்திசை ஒடுங்கி ஓர்திசையானது

காதல் வந்து காதில்சொன்னது உண்ணை பாரென்று
மீண்டும் காண தூண்டியது
அதுதான் நான் என்றது

அவளிடம் தொலைபேசியில் பேசினேன்
அவளை எண்ண எண்ண
என்அகவை குறைந்தது

உலகுக்கு திங்கள் தோரும் பௌர்னமி
எனக்குமட்டும் நித்தம் நித்தம் ...
அவளிருக்கையில் !

என காதல் வரிகள் என் நென்சில்
என்னை நானே துலைத்துவிட்டேன்
அவளைத் தேடி

மின்னலாய் கண்ணில் பட்டாள்
பார்வை பரிபோகவில்லை
இதயம் பரிபோனது

என்முன்னெ அவளிருந்தால்
எட்டுத்திசை ஒடுங்கி
ஓர்திசையானது

Tuesday, August 28, 2007

To my Friend Suman

இவள் வாழ்வில் என்றென்றும் புன்னகை
இளவேனிற் காலத்து குளிர் மழை
நிர்மலமற்று பொழியும் பந்தனை
நட்பில் இவளுக்கேது ஒரு இணை

நட்பை கொண்டாடும் வித்தை கற்றவளோ
என்நாளூம் மெய் பக்கம் சார்ந்திருந்தவளோ
இன்பமே கொண்டாடும் பெண்ணிவளோ
துன்பமே காணாத குழகிவளோ